×

குமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் அப்பகுதி அணைகளின் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் பெருஞ்சாணி அணையிலிருந்து 29,910 கன அடி நீர் உபரியாக திறக்கப்பட்டு வந்தது. எனவே பெருஞ்சாணி அணையின் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். தற்போது, பெருஞ்சாணி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து 4000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கான நீர்வரத்து 8,523 கன அடியாக குறைந்துள்ள நிலையில் நீர் மட்டம் 73.35 கன அடியாக இருக்கிறது. பெருஞ்சாணி, பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் குழித்துறை, திக்குறிச்சி மற்றும் மங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது. சாலைகள் நீரில் மூழ்கியதால் தனித்தீவாக காட்சியளித்த இந்த பகுதிகள் தற்போது நிலைமை சீராகி வருவதால் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanyakumari,Peranjani Dam,Flood,Coastal Area
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...