×

அமராவதி ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்ததால் வெள்ளப்பெருக்கு

கரூர்: அமராவதி ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருலட்சம் கனஅடிக்குமேல் தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு சுமார் ஒருலட்சம் கனஅடிநீர் கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. கதவணையில் 1டிஎம்சி அளவுக்குநீர் தேக்கிவைக்கப்பட்டு உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் அணையில் இருந்து கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், கட்டளைவாய்க்கால், தென்கரை வாய்க்கால்களுக்கு 1,600கனஅடிநீர் திறக்கபபடுகிறது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அமராவதி ஆறு வறண்டுபோய் கிடந்தது. உடுமலையில்உள்ள அமராவதி அணையில் இருந்து கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டபாசன பகுதிகளுக்கு நீர் திறக்கப்படுகிறது. கடந்த மாதம் தண்ணீர் கரூர் மாவட்டத்திற்கு திறக்கப்பட்டது. அதன் பின்னர் அணையில் நீர்இருந்தும் திருப்பூர் மாவட்டத்திற்கே திறந்துவிடப்படுகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் 90அடி, நேற்று முன்தினம் அணை நிரம்பியது. உபரியாக வந்த தண்ணீர் சுமார் 15ஆயிரம் கனஅடி கரூர் மாவட்டத்திற்கு திறக்கப்பட்டது.

வழக்கமாக உடுமலையில் உள்ள அதிகாரிகள் கரூர் பொதுப்பணித்துறை மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் கரூர் அருகே உள்ள செட்டிபாளையம் தடுப்பணைக்கு தண்ணீர்வந்த பின்னர்தான் அறிவிப்பே வெளியிடப்பட்டது. முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் முதல்நாள் வறண்டு போய்கிடந்த ஆற்றில் நேற்று காலையில் ஆற்றில் தண்ணீர்செல்வதைப்பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. கரூர் மாவட்ட கடைமடை பகுதியான திருமுக்கூடலூர் என்ற இடத்தில் அமராவதி ஆற்று நீர் காவிரியில் கலக்கிறது.இதனால் காவிரியாற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்து மாயனூர் தடுப்பணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. காவிரியாற்றில் வெள்ள
அபாயம் ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amravati, water, flooding
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...