×

குத்திரபாஞ்சான் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பணகுடி: பணகுடி பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. குத்திரபாஞ்சான் அருவிக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நெல்லை மாவட்டம், பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தளவாய்புரம், கொமந்தான், ரோஸ்மியாபுரம், சிவகாமிபுரம், காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அனுமன்நதி, சமன்அணை, கன்னிமார்தோப்பு உள்ளிட்ட ஆறுகளில் அதிகளவு வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. பணகுடி அருகே உள்ள குத்திரபாஞ்சான் அருவியில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளமாக கொட்டியது. நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால் அருவிக்கு குளிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஏற்கனவே பரிவிரிசூரியன்குளம் நிரம்பியுள்ள நிலையில் மறுகால் பாயும் நிலையில் உள்ளது. மேலும் தற்போது நெல் நடவு செய்யப்பட்ட வயல் பகுதிகளில் மழை நீர் புகுந்து உள்ளதால் விவசாயிகள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த திடீர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் ரோஸ்மியாபுரம் பகுதியில் உள்ள ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. காலையில் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர். தொடர்ந்து மழை பெய்தபடியே உள்ளதால் பணகுடி பகுதியை சுற்றியுள்ள சூளைகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kutarapanan Falls, Water, Increase
× RELATED பாளையங்கால்வாய் தடுப்பு சுவர்களில்...