×

இந்திய அளவில் இரண்டாமிடம் போடி பள்ளி மாணவன் குங்பூ போட்டியில் சாதனை

போடி: பெங்களூரில் நடந்த குங்பூ போட்டியில் போடி பள்ளி மாணவன் இந்திய அளவில் 2வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் துரைப்பாண்டி.  திருப்பூரில் ஒரு மில்லில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (12) போடியிலுள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் போடியில் உள்ள நீலமேகம் அகடாமி ஆப் மார்கேல் என்ற பயிற்சி மையத்தில் கராத்தே மற்றும் குங்பூ பயிற்சி பெற்றுள்ளார்.

கடந்த மாதம் திருச்செங்கோட்டில் நடந்த தமிழக அளவிலான குங்பூ போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து 13 பேர் பங்கேற்றனர். இதில் சஞ்சய் உள்ளிட்ட 11 பேர் பெங்களூருவில் நடந்த அகில இந்திய போட்டிக்கு தேர்வானார்கள். நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்த அகில இந்திய அளவிலான குங்பூ போட்டியில் சஞ்சய் 25க்கு 23 புள்ளிகள் எடுத்து குங்பூ போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். இதற்காக அவருக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. சாதனை மாணவன் சஞ்சயை போடி பள்ளியின் செயலாளர் செல்வராஜ், முதல்வர் மகராஜன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bodi, school student, kung fu contest
× RELATED நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த...