×

கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் அதிரசம் சுட்டு பூசாரிகள் படையல் : பக்தர்கள் பரவசம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே சென்னம்மாள் கோயில் திருவிழாவையொட்டி, கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் அதிரசம் சுட்டு பூசாரிகள் படையலிட்ட நிகழ்வை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு வியந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுடப்பட்டி வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சென்னம்மாள் கோயில் உள்ளது. இங்கு 15ம் ஆண்டாக நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. முதல் நாள் கொடிஏற்றுதல், 2ம் நாள் கலச, கும்ப பூஜை, 3ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, 4ம் நாள் பம்பை உடுக்கை, காவடியாட்டம், கைசிலம்பு, நையாண்டி மேளம், கரகாட்டம், தரை தப்பட்டைக்குழுவுடன் சென்னம்மாள் சாமி, போச்சம்பள்ளி பேருந்து நிலையம் வழியாக தேர் உலா வந்தது. இரவு மகுடவரதன் சண்டை எனும் தெருக்கூத்து மற்றும்  நாடகம் நடைபெற்றது.

5 ம் நாளாக நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, ஓமகுண்ட பூஜையை தொடர்ந்து 48 சங்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்களும், ஆண்களும் ஈரத்துணியுடன் கோயிலை சுற்றி உருளு தண்டம் போட்டனர். பின்பு குழந்தை வரம் வரம் வேண்டி பெண்கள் பலர் பூசாரியிடம் மடியேந்தி பிரசாதம் வாங்கி சாப்பிட்டனர். அதனை தொடர்ந்து கோவில் பூசாரி காளியப்பன் என்பவர் அருள்வந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு அதிரசத்தை எடுத்து சென்று அம்மனுக்கு படையலிட்டார்.

அதனை தொடர்ந்து பெண்களும், ஆண்களும் சாமி ஆடியபடி எண்ணையில் கைவிட்டு அதிரசத்தை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அந்த வடையை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி சாப்பிட்டனர். பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆடுகளை பலியிட்டு கறி விருந்து படைத்தனர். தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Oil, priests, pilgrims, ecstasy
× RELATED 12,959 கோயில்களில் பணிபுரியும்...