×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரித்து 4 மாதத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 பொதுநல வழக்குக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் சிடி செல்வம், பஷீர் அகமது அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. மே 22-ம் தேதி போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு தவறானது

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சிடி செல்வம், பஷீர் அகமது அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு ரத்து


தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருந்தது. வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய 15 வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

துப்பாக்கிச்சூடு தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் விளக்கம்

துணை தாசில்தார் துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். போலீஸ் தவறான நடைமுறைகளை பின்பற்றி உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது மக்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் வரவேற்பு

துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி மார்க்சிஸ்ட் வழக்கு தாக்கல் செய்தது என்று பாலகிருஷ்ணனன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பு முதல்கட்ட வெற்றி என்று அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi firing, case, High Court order,CBI probe
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு