×

உத்தரப்பிரதேசத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ ஆயுத கண்காட்சி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கண்டு கழித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு பைசாபாத் நகரில் ராணுவ ஆயுதங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. அதனை பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

கண்காட்சியில் தூப்பாக்கிகள், சிறிய அளவிலான மோட்டார் ரக ஆயுதங்கள், அதி நவீன ஆயுதங்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை பார்ப்பதன் மூலம் ராணுவத்தினர் மீதான நம்பிக்கையும், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாகி இருப்பதாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Military,Exhibition,Independence Day,Uttar Pradesh
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி