×

நடப்பாண்டு விரைவு ரயிலுக்கான புதிய அட்டவணை : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை : நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்டு 14 வரை பழைய அட்டவணை நீட்டிக்கப்பட்டது. இந்தப் புதிய கால அட்டவணை நாளை முதல் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில், தாம்பரம்-நெல்லை அந்தியோதியா ரயில், பாண்டியன் விரைவு ரயில், சிலம்பு விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில் உள்ளிட்ட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய முன்பதிவில்லாத அந்தியோதயா விரைவு ரயில் தினசரி காலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கவுகாத்தி மற்றும் திப்ரூகர் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி-நாகூர் விரைவு பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் விரைவு ரயில் காலை 8.30 மணிக்கு பதிலாக 8.00 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.20 மணிக்கு பதிலாக, 8.40 மணிக்கு புறப்படும்.

அதேபோல் செங்கல்பட்டு - கச்சிகுடா விரைவு ரயில் மாலை 5.00 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே கூடியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Southern Railway , new schedule, express train
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...