×

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் : வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை: கனமழை பெய்து வருவதை ஒட்டி வால்பாறையில் உள்ள தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார். வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக வால்பாறையில் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கருமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் தண்ணீர் வால்பாறை பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் அக்காமலை தடுப்பணையை வந்து சேர்வதால் அக்காமலை தடுப்பணையும் நிரம்பி வழிந்து வருகிறது.

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதன் தாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மாணவ, மாணவிகள் மழைக்கு நடுவே, பள்ளிக்கு செல்வது சிரமம் என்பதால் அவர்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்  உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Southwest monsoon ,intensify,Vacation, schools ,Valparai
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...