×

இலங்கை அரசின் அடாவடி சட்டத்தின் கீழ் கைது 27 தமிழக மீனவர்கள் உடனே மீட்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 27 மீனவர்கள் கடந்த 10ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது புதிய கடல் தொழில் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை. பல லட்சம் ரூபாய் கட்டாய அபராதம் செலுத்த வேண்டி வரும். இலங்கை அரசின் இந்த அடாவடித்தனம் கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசு திருத்தம் செய்து நிறைவேற்றியிருக்கும் கடல் தொழில் சட்டமானது மனிதநேயமற்ற அபாயகரமான சட்டமாகும். இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் மத்தியில் ஆளும் பாஜ அரசு வேடிக்கை பார்த்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மீனவர்களின் நலனை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையையும் துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu fishermen,immediately,recovered,Sri Lankan Government,SDPI Party,assertion
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...