×

தன்னுடன் உறவு வைத்து கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார்: ஆண் நண்பர் மீது வாலிபர் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

சென்னை: கல்லூரியில் ஒன்றாக படித்த சக ஆண் நண்பர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக வாலிபர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சேகர் (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அவருடன் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் படித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் சேகரை தனது மதத்திற்கு மாற வேண்டும் என்று மணி தெரிவித்துள்ளார். அதன்படி, சேகரும் மதம் மாறியுள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் கல்லூரி படிப்பு முடிந்து உடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி, கல்லூரி படிப்பு முடிந்த உடன் கடந்த ஜூன் மாதன் சேகர் மருத்துவரிடம் சென்று தனது மர்ம உறுப்பை துண்டித்து பெண்ணாக மாற சிகிச்சை  பெற்றுள்ளார். மருத்துவர் உடனே மர்ம உறுப்பை துண்டிக்க முடியாது 40 நாட்கள் மாத்திரைகள் உட்கொண்ட பிறகு தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர் கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையை, இந்த சம்பவம் குறித்து மணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே மணிக்கு அவசர அவசரமாக பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த விவரம் சேகருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சேகர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக மணியுடன் ஒன்றாக உறவு கொண்ட புகைப்படத்ைத மணி வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஆத்திரம்தீராத சேகர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் அடங்கிய ‘போஸ்டர்’ அடித்து மணி வீட்டின் அருகே ஒட்டியுள்ளார்.

இதுகுறித்து மணியின் பெற்றோர் சேகர் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சேகரை அழைத்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து, மணி வீட்டின் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது. இந்நிலையில், மணியின் பெற்றோர் சேகரை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் சேகர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மணி மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சேகர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்படி விசாரணை நடத்த திருவொற்றியூர் போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cheated,relationship,ComplaintCommissioner's Office, ,Boyfriend
× RELATED மூன்று சக்கர வாகனம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா