×

திருப்பதி கோயிலில் கும்பாபிஷேக விழா தங்க கோபுரத்தில் இன்றும் மராமத்து பணி

திருமலை: திருப்பதி கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி தங்க கோபுரம், கருவறையில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இன்றும் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் காலை 10.16 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. இதற்காக 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நேற்றுமுன்தினம் தொடங்கியது. ஏழுமலையான் மூலவரின் ஜீவசக்தி உள்ள தங்க கலசத்தில் பூஜைகள் செய்வதற்காக, தேவஸ்தானம் 300 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட தங்க தர்ப்பையை தயார் செய்துள்ளது.

கும்பாபிஷேக யாகத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் 13 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலமாக 22 ஆயிரத்து 22 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 6,994 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ. 73 லட்சம்  காணிக்கையாக செலுத்தி இருந்தனர். நேற்று மூலவர் கருவறையிலும் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் தங்க கோபுரத்திலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இன்றும் நடக்க உள்ளது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் மராமத்து பணிகளையும் அர்ச்சகர்களை மட்டுமே  செய்யவுள்ளனர்.

மேலும் யாக சாலையில் உள்ள கும்பத்திற்கு தொடர்ந்து வேத பண்டிதர்கள் மற்றும் ரூத்விக்குகள் மூலமாக யாகம் நடைபெற்று வருகிறது.  யாகம் நடைபெறக்கூடிய நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலை 5 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 6 மணி வரையும்,  இரவு 7 மணி முதல் 12 மணி வரை என 16 அரைமணிநேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumbabhishek Festival,celebrated,Tirupati,temple,golden tower,
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...