×

கொப்பரை வரத்து அதிகரிப்பால் தேங்காய் எண்ணெய் டின்னுக்கு ரூ200 சரிவு

சேலம்: தேங்காய் வரத்து அதிகரிப்பால் எண்ணெய் அரவை ஆலையில் தேங்காய் எண்ணெய் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டின்னுக்கு ரூ200 விலை சரிந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு போதிய மழை இல்லாததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தென்னைமரங்கள் பட்டுப்போயின. இந்த நிலையில் கடந்தாண்டும், நடப்பாண்டும் பெய்த மழையால் தென்னை மரங்களில் ஓரளவிற்கு காய்ப்பு பிடித்தது. அதன் பலன் கடந்த சில மாதமாக கிடைத்து வருகிறது. தற்போது மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் அரவைக்கும் கொப்பரை வரத்து கூடியுள்ளது. இதனால் தேங்காய் எண்ணெய் விலை சரிந்து வருகிறது.

இது குறித்து சேலம் மொத்த எண்ணெய் வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தேங்காய் எண்ணெய் அரவை ஆலைகள் உள்ளன. கடந்தாண்டு தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த மழையால், நடப்பாண்டு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் அரவை ஆலைகளில் கடந்த இரு மாதமாக வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இரு மாதத்திற்கு முன்பு ரூ3600க்கு விற்ற 15 கிலோ டின் தேங்காய் எண்ணெய் ரூ200 சரிந்து, தற்போது ரூ3400 என விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Increase in coconut, coconut oil, tin rupees 200 drops
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...