×

வரத்து குறைவால் தக்காளி விலையில் ஏற்றம்

பாவூர்சத்திரம்: வரத்து குறைவால் தக்காளி விலையில் ஏற்றம் காணப்பட்டது. நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, பெத்தநாடார்பட்டி, வெக்காலிப்பட்டி, கல்லூரணி, மகிழ்வண்ணநாதபுரம், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், அருணாப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாரி, மிளகாய், தக்காளி, வெண்டை, சோளம் மற்றும் பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளன. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தக்காளி பயிரிட்டு உள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் ஆந்திராவுக்கும் விற்பனைக்கு செல்கிறது. அமோக விளைச்சல் காரணமாக சில வாரங்களாக தினமும் 5 டன் முதல் 15 டன் வரை விற்பனைக்கு வந்தது. இதனால் கிலோ ரூ2 முதல் ரூ5 வரையே விற்பனையான நிலையில், தற்போது மகசூல் முடியும் தருவாயில் மார்க்கெட்டிற்கு தினமும் ஒரு டன்னுக்கு குறைவாகவே தக்காளி விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக விலையில் ஏற்றம் காணப்பட்டு கிலோ ரூ10 முதல் 13 வரை விற்பனையானது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tomato, price rise
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு: வீடியோ வைரல்