×

நீரவ் மோடி மோசடி விவகாரம் பஞ்சாப் வங்கி மாஜி எம்டி உஷா அதிரடி டிஸ்மிஸ்

புதுடெல்லி:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் ரூ14,000 கோடி மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பதவி வகித்தபோது, வங்கி செயல்பாடுகளை சரியாக கட்டுப்படுத்தவில்லை எனவும், இது ஸ்விப்ட் முறையிலான நீரவ்மோடி மோசடிக்கு வழி வகுத்துவிட்டது எனவும் குற்றம் சாட்டியிருந்தது. அதோடு, இவரிடமும், பஞ்சாப் வங்கி முன்னாள் செயல் இயக்குநர் சஞ்சீவ் ஷரனிடமும் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அலகாபாத் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான இவரது அதிகாரங்கள் சமீபத்தில் பறிக்கப்பட்டன. இதை தொடர்ந்து உஷா அனந்தசுப்பிரமணியனை டிஸ்மிஸ் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உஷா அனந்தசுப்பிரமணியன் கடந்த 2011 ஜூலை முதல் நவம்பர் 2013 வரை செயல் இயக்குநராக இருந்தார். பின்னர் ஆகஸ்ட் 2015 முதல் மே 2017 வரை அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக பதவி வகித்தார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் எம்ஏ படிப்பு படித்தவர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirav Modi, Fraud, Punjab Bank, Maji MT Usha, Dismiss
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...