×

தொடர் மழையால் 1,500 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு

குலசேகரம்:  தொடர் மழை காரணமாக, குமரியில் 1,500 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக நடந்து வருகிறது. ரப்பர் விவசாயம் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து, தினமும் 250 டன் ரப்பர் உற்பத்தியாகி வருகிறது. ஒரு கிலோ ரப்பர் ரூ131க்கு விலை போகிறது. இதனால் தினமும் சுமார் ரூ32 கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்து வருகிறது. குளிர்காலத்தில் ரப்பர் பால் உற்பத்தி அதிமாக இருக்கும். ஆனால் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பால் வெட்டும் தொழில் அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்து வருவதால் ரப்பர் வெட்டும் தொழிலாளிகள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் சிறிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பால்வெட்டும் தொழில் நடந்து வருகிறது. மழைகாரணமாக தினமும் சுமார் 200 டன் பால்  உற்பத்தி பாதிப்பு அடைந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமழையால் சுமார் 1500 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் சுமார் ரூ192 கோடி வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளதாக ரப்பர் வியாபாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Continuous rain, 1,500 tonnes of rubber, production impact
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...