×

அதிமுக செயற்குழு 20ம் தேதி கூடுகிறது

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் அவசரமாக வருகிற 20ம் தேதி கூடுகிறது. கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் குறைந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி திங்கட்கிழமை 4 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அதிமுக செயற்குழு கூட்டப்பட்டு 8 மாதங்கள் ஆகி விட்டதை தொடர்ந்து இந்த கூட்டம் நடக்கிறது.
இதில் செயற்குழு உறுப்பினர்களாக உள்ள அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 250 பேர் கலந்து கொள்வார்கள். மேலும் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது பற்றியும், உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் விவாதிக்கப்படும். அதிமுகவில் உள்ள சிலர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி பற்றி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்தும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The AIADMK and the Executive Committee meet on 20th
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...