×

ப. சிதம்பரம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிக்கு பதவி நீட்டிப்பு

புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் ரூ.3500 கோடிக்கும், ஐஎன்எக்ஸ் மீடியா ஒப்பந்தம் ரூ.305 கோடிக்கும் மேற்கொள்ளப்பட்டது. இந்த அன்னிய முதலீடுக்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை விசாரித்து வருகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரி வினீத் விநாயக் விசாரித்து வருகிறார்.

மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் காரத்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு பணம் கைமாறியது குறித்து இவர் விசாரித்து வருகிறார். இவர் 1995ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி. இவரது பதவிக் காலம் முடியவடையவுள்ளதால், அவருக்கு 2 ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் 2020ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி வரை பதவியில் இருப்பார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : P. Chidambaram, CBI officer, promotion extension
× RELATED பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம்