×

மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் தானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 50 ஆணடில் பல்வேறு சூழ்ச்சி, துரோகங்களை தாண்டி கட்சியை காத்தவர் கலைஞர் என்று ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார். கலைஞரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர் என்று அவர் கூறியுள்ளார். எம்ஜிஆரையும், சிவாஜியையும் ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியது கலைஞர் வசனம் தான் என்று ரஜினி கூறியுள்ளார். கலைஞர் கருணாநிதியால் பல நூறு பேர் அரசியல் தலைவர்களாக உருவாக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தை கண்டு பிரமித்து போனேன் என்று அவர் கூறினார். என்றென்றும் நன்றி மறக்காதவர்கள் என்பதை கலைஞருக்கு வந்தகூட்டம் திருபித்தது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இனி யாரை சந்திப்பதற்காக நாட்டின் தலைவர்கள் தமிழகத்துக்கு வருவார்கள் என்று ரஜினி கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்துவிட்டதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். 45 வயதில் திமுக தலைமையை ஏற்று 50 ஆண்டுகள் பதவி வகித்தவர் கலைஞர் என்று  அவர் கூறினார். மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் தானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு திரையுலகினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கலைஞரின்  நினைவேந்தல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராதாரவி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாக்கியராஜ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

நடிகைகள் சரண்யா, பொன்வண்ணன், பூர்ணிமா பாக்கியராஜ், அம்பிகா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி அவரது படடத்துக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். ரேவதி, ஸ்ரீபிரியா, குட்டி பத்மினி உள்ளிடடோரும் நினைவேந்தலில் பங்கேற்றுள்ளனர். நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். மேலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். விக்ரம் பிரபு, சுஹாசினி, குஷ்பு, விஜயகுமார் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கலைஞரின் கதை, வசனங்களை பேசி நடித்தது  நினைவு பற்றி தலைவாசல் விஜய் கூறினார். பெண் சிங்கம், உளியின் ஓசையில் கலைஞர் வசனத்தில் தலைவாசல் விஜய் நடித்துள்ளார். திரைப்பட தயாரிப்பின் அனைத்துத்துறைகளிலும் கவனம் செலுத்துவார் கலைஞர் என்று மோகன் கூறுியுள்ளார். ஒரு படத்தில் கலைஞர் இணைந்திருந்தால் அது இயக்குநருக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று தொகுப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். கலைஞருடன் இணைந்து 5 படங்களில் பணியாற்றி உள்ளதாக நாசர் பெருமிதமடைந்துள்ளார்.  
 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kalaignar Karunanidhi, Marina, Struggle, Actor Rajinikanth
× RELATED தூத்துக்குடி அருகே சீல் வைக்கப்பட்ட...