×

மந்தைவெளியில் வீடியோ கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளைர்கள்

சென்னை: சென்னை மந்தைவெளியில் வீடியோ கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையனை சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். மந்தைவெளி தேவநாதன் தெருவில் பாபு என்பவருக்கு சொந்தமான வீடியோ கார்னர் என்ற கடை உள்ளது. இங்கு கேமராக்களை வாடகைக்கு விடுதல், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வீடியோ பதிவு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு விலை உயர்ந்த நவீன ரக கேமராக்கள் இருப்பதை தெரிந்துகொண்ட கொள்ளையன் அவற்றை கொள்ளையடிக்கும் முயற்சியாக நேற்று இரவு கடையின் பூட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

இந்நிலையில் தெருவில் ஆள் நடமாட்டம் ஏற்பட்ட சூழலில் பூட்டை உடைக்கும் முயற்சியை கைவிட்டு கொள்ளையன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது தொடர்கதையாகவுள்ள நிலையில் நேற்று சி.சி.டி.வி.யில் சிக்கிய கொள்ளையனுக்கு மற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bandits,burglary,break,video store
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...