×

அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கம்

சென்னை : அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி சின்னசாமி செயல்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை, சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக இருந்தவர் சின்னசாமி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக, அண்ணா தொழிற்சங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், சின்னசாமியை, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தனர்.

இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடி பணத்தை கையாடியதாக சின்னசாமி கோவையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் சின்னசாமியை ஆஜர்படுத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது அ.ம.மு.க.வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : From AIADMK ,anna union ,Chinnasamy
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...