×

டிராவை நோக்கி பெங்களூரு டெஸ்ட்

பெங்களூரு: இந்தியா ஏ - தென் ஆப்ரிக்கா ஏ அணிகளிடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட், டிராவை நோக்கி செல்கிறது.ஆலூர் கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் (4 நாள் ஆட்டம்), டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா ஏ அணி முதலில் பந்துவீசியது. இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 345 ரன் குவித்து ஆல்  அவுட்டானது.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின் பெரும் பகுதி கனமழையால் பாதிக்கப்பட்டது. ஆட்ட நேர முடிவில்  ஆப்ரிக்கா ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்துள்ளது. கை வசம் 3 விக்கெட் இருக்க, அந்த அணி இன்னும் 51 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி டிராவில்  முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Draw ,draw, Bengaluru Test
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...