×

டிஎன்பிஎல் டி20 பைனல் மதுரை பேந்தர்சுக்கு 118 ரன் இலக்கு

சென்னை: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 பைனலில், மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 118 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மதுரை பேந்தர்ஸ் முதலில் பந்துவீசியது. டிராகன்ஸ் தொடக்க வீரர்களாக நிஷாந்த், கேப்டன் ஜெகதீசன் களமிறங்கினர். ஜெகதீசன்  ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, மறு முனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.நிஷாந்த் 1, அனிருத் 4, சதுர்வேத் 9, தோத்தாத்ரி 0, அபினவ் 1 ரன்னில் அணிவகுக்க, டிராகன்ஸ் 4.4 ஓவரில் 21 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த விவேக் 13, ராமலிங்கம் ரோகித் 15 ரன்னில்  வெளியேறினர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ஜெகதீசன் 51 ரன் எடுத்த நிலையில் (44 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) வருண் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சிலம்பரசன் 2,  முகமது 17 ரன்னில் பெவிலியன்  திரும்ப, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

மதுரை பந்துவீச்சில் தன்வர் 4, லோகேஷ் ராஜ் 3, வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் களமிறங்கியது. அருண்  கார்த்திக், தலைவன் சற்குணம் இருவரும் துரத்தலை தொடங்கினர். சிலம்பரசன் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் சற்குணம் டக் அவுட்டாகி வெளியேறினார் (இது அவர் சந்தித்த முதல் பந்து ஆகும்). அடுத்து வந்த துஷார்  ராஜாவும் 2 பந்துகளை சந்தித்து முட்டை போட்டார். இக்கட்டான நிலையில் உள்ளே வந்த கேப்டன் ரோகித் தான் சந்தித்த முதல் பந்திலேயே தங்க முட்டை போட்டு வெளியேற, மதுரை அணி முதல் ஓவர் முடிவில் 2 ரன்னுக்கு  3 விக்கெட் இழந்து நிலை குலைந்தது. சிலம்பரசனின் அபார பந்துவீச்சில் 3 வீரர்கள் வரிசையாக டக் அவுட்டாகி வெளியேறியதால் டிராகன்ஸ் அணி வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TNPL, T20 Final, Madurai, visitors
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்...