×

ஓணம் நெருங்குவதால் ‘டிமாண்ட்’ பீன்ஸ் ஒரு மூட்டை 3,000: ஓரிரு வாரங்களில் அறுவடை

தேவாரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு மூட்டை 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.தென்மாவட்டங்களுள் தேனி மாவட்டம் பசுமையான வயல்வெளிகளை கொண்டது. இம்மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில், சுமார் 14 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் இருபோக சாகுபடி செய்யப்படுகிறது.  மேலும், தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம், அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் பீன்ஸ் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையக்கூடிய பீன்ஸ் தினந்தோறும் தேவாரம் மார்க்கெட்டிற்கு வந்து பின்பு கம்பம், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கிருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம்.

கேரளாவில் அடுத்த வாரம் ஓணம் பண்டிகை துவங்குகிறது. இதனையொட்டி காய்கறிகள் விற்பனை களைகட்டும். எனவே, விவசாயிகள் இம்முறை அதிகளவு பீன்ஸ் பயிரிட்டுள்ளனர். ஓணம் பண்டிகை நெருங்கும் காலத்தில்  அறுவடை செய்யப்படும். பின் மூட்டைகளில் கட்டி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘எப்போதுமே ஓணம் பண்டிகைக்காக பீன்ஸ் கூடுதலாக சாகுபடி செய்யப்படும். இம்முறை தேனி மாவட்டத்தில் மழை கைவிட்டபோதும், ேபார்வெல் மூலம் தண்ணீரை இறைத்து பீன்ஸ்  சாகுபடி செய்துள்ளோம். தற்போது 60 கிலோ பீன்ஸ் மூட்டை 3 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருகிறோம். விளைச்சல் கூடுதலாக இருக்கும்போது 500 வரை குறைய வாய்ப்புள்ளது. பீன்ஸ் எடுப்பு ஒரு சில நாட்களில்  துவங்கும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 'Moment', Harvesting, weeks
× RELATED பொங்கல் திருநாள்!: தூய்மை பணிகளை...