×

எள் வரத்து சரிவால் நல்லெண்ணெய் டின்னுக்கு 300 விலை அதிகரிப்பு

சேலம்: எள் வரத்து சரிவாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாலும், நல்லெண்ணெய் டின்னுக்கு 300 வரை விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியில் எள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதைதவிர மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட  மாநிலங்களிலும் எள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வட மாநிலங்களில் பெய்த மழையால் எள் உற்பத்தி குறைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் எள் விளையும் பகுதியில் சரியான மழை இல்லாததால் உற்பத்தி சரிந்துள்ளது. இதன் காரணமாக நல்லெண்ணெய்  அரவை ஆலைகளுக்கு எள் வரத்து சரிந்ததால், எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த மொத்த தாவர எண்ணெய் வியாபாரிகள் கூறுகையில், ‘எள் பொறுத்தமட்டில் வட மாநிலங்களில் இருந்து தான் அதிகளவில் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலங்களில் பெய்த  மழையால் எள் வரத்து 30 முதல் 40 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு எள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு உணவில் எள் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக எள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் நல்லெண்ணெய் விலை கூடியுள்ளது. கடந்த மாதம் 2300க்கு விற்ற 15  கிலோ டின், தற்போது டின்னுக்கு ₹300 அதிகரித்து, ₹2,600 என விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Screwed , good oil, tin
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்