×

சூரியனின் கொரோனோ சுற்று வட்டத்தை ஆய்வு செய்வதற்கான பார்கர் விண்கலத்தை நாசா ஏவியது

அமெரிக்கா: சூரியனின் கொரோனோ சுற்று வட்டத்தை ஆய்வு செய்வதற்கான பார்கர் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலமானது டெல்டா 4 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கெனவெரலில் இருந்து ஏவப்பட்டது. சூரியனின் மேற்பரப்பைக் காட்டிலும் கொரோனா எனப்படும் சுற்று வட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது தற்போது வரை புதிராகவே உள்ளது. இது குறித்து பார்கர் விண்கலம் ஆராய்ந்து தகவல்களை அளிக்கவுள்ளது.

7 ஆண்டுகளுக்கு செயல்படும் வண்ணம் பார்கர் உருவாக்கப்பட்டுள்ளது. பார்கர் விண்கலம் நொடிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 60 லட்சம் கிலோ மீட்டர் என்கிற நெருங்கிய தொலைவில் சூரியனை அணுகவுள்ளது. ஆயிரத்து 500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NASA,spacecraft,study,corono circuit
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...