×

இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் காலமானார்

லண்டன்:  2001-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.  கரீபியன் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபவுலின் முழுப்பெயர் சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவர்.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபவுல், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக அந்தாண்டு நோபல் பரிசு நைபவுலுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்களை பற்றி இந்த புத்தகம் பேசியது. இந்நிலையில், 85 வயதான அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். நைபவுலின் மறைவுக்கு சர்வதேச அளவிலான பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : V S Naipaul, Nobel prize,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு: வீடியோ வைரல்