×

துளித் துளியாய்...

* டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.
* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நாளை தொடங்கி 4 வார காலம் நடைபெறுகிறது.
* இந்தியா ஏ அணியுடன் பெங்களூருவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்துள்ளது. எர்வீ 58, ஹம்ஸா 93 ரன் விளாசினர். முன்னதாக, இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 345 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

* வியட்நாம் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்திய வீரர் அஜய் ஜெயராம் தகுதி பெற்றார். அரை இறுதியில் ஜப்பான் வீரர் யூ இகராஷியுடன் நேற்று மோதிய ஜெயராம் 21-14, 21-19 என்ற நேர் செட்களில் வென்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Drop tap , sports
× RELATED தமிழகத்தில் காலியாக இருக்கும் 2...