×

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் அரை இறுதியில் ஹாலெப் : நடால் முன்னேற்றம்

டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) தகுதி பெற்றார். கால் இறுதியில் கரோலின் கார்சியாவுடன் (பிரான்ஸ்) மோதிய ஹாலெப் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் அனஸ்டேசியா சேவாஸ்டோவாவுடன் (லாத்வியா) மோதிய அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். ஆஷ்லி பார்தி (ஆஸி.) தனது கால் இறுதியில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் கிகி பெர்டன்சை (நெதர்லாந்து) வீழ்த்தினார். எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் எலிஸ் மெர்டன்ஸை (பெல்ஜியம்) வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 19 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு கால் இறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கிரிகோர் திமித்ரோவை (பல்கேரியா) வென்றார். இளம் வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (20 வயது, ஜெர்மனி) - ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (19 வயது, கிரீஸ்) இடையே நடந்த கால் இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. 2 மணி, 27 நிமிடத்துக்கு நீடித்த இப்போட்டியில் சிட்சிபாஸ் 3-6, 7-6 (13-11), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ராபின் ஹாஸை (நெதர்லாந்து) வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rogers Cup, tennis, semi-final, hollap, Nadal
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...