×

அதிராம்பட்டினம் கடலில் வெள்ளி மீன்கள் அதிக வரத்து

அதிராம்பட்டினம்:  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகர் துறைமுக பகுதி மீனவர்கள் மட்டும் தொடர்ந்து வெள்ளி மீன்களை பிடிப்பதற்கான பிரத்யேக  வலைகளை பயன்படுத்தி கடலுக்கு சென்று  வெள்ளி மீன்களை பிடித்து வருகின்றனர். வருடம் முழுவதும் இந்த மீன்கள் அகப்படும். மழைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும். இப்போது சீதோஷ்ண நிலை குளிர்ச்சியாக இருப்பதாலும், கடலில் குளிர்ந்த காற்று வீசுவதாலும், அதிராம்பட்டினம் கடலில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மீன்கள் இரண்டு மாதங்களுக்கு முன் 1 கிலோ ரூ.150 விற்பனை ஆகியது. இப்போது  வரத்து அதிகரித்து உள்ளதால் 1 கிலோ 80 ரூபாய் அளவுக்கு குறைந்து விட்டது.
 இங்கு பிடிப்படும் மீன்கள் கேரளாவிற்கு அதிக அளவில் செல்கிறது.

உள்ளூரிலும் இந்த மீன்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். ெவள்ளி மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளதால் மீனவர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து  மீனவர் சங்கர் கூறுகையில் இந்த மீன்களுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு வெள்ளிமீன், தேசப்பொடி, வெள்ளைபொடி, பொடிமீன் கேரளாவில் மட்லீஸ் என பல்வேறு பெயர்களை வைத்து அழைகின்றார்கள் கேரளாவில் இந்த மீனுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இங்கு பிடிபடும் மீன்கள்  கேரளாவுக்கு ஏற்றுமதியாகிறது தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும்  மீன்குழம்புக்கு இந்த வெள்ளி மீன்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. அதிக முள் இருக்காது. ருசியும் நன்றாக இருக்கும்’ என்றார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Silver fish, sea, tangan, rainy season
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...