×

வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை

டாக்கா: இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்பவர் முஸ்தாபிசுர் ரகுமான். நடப்பாண்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முஸ்தாபிசுர் விளையாடிய விளையாடிய போது காயம் அடைந்தார்.  

இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் அவரால் இடம் பெற முடியவில்லை. இதன் விளைவாக வங்கதேச அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.இந்நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல். உள்ளிட்ட வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட முஸ்தாபிசுர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கூறியதாவது:

ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகளில் விளையாடியதால் முஸ்தாபிசுர் காயமடைந்தார். இதன் காரணமாக தேசிய அணிக்காக முஸ்தாபிசுர் ரகுமான் விளையாட முடியாமல் போனதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் கூறினார். இதன் காரணமாக அவர் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Bangladesh, Mustafizur Rahman, foreign T20, ipl
× RELATED ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ...