×

அனுபவ வீரர்கள் அசத்தல்...... முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி

கயானா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் அணி, 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தமீம் இக்பால் சதமடித்து அசத்தினார். வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிய வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தமீம் இக்பால் அபாரமாக ஆடி சதம் விளாசினார். இது அவருக்கு பத்தாவது சதம். ஆல்ரவுண்டர் ஷகிப் 97 ரன்கள் எடுத்து 3 ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார்.  வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிஷூ 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. அந்த அணியின் அனுபவ வீரர் கிறிஸ் கெய்ல் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஹெட்மைர் 52 ரன்கள் எடுத்தார். வங்கதேசவீரர்களின் துல்லியமான பந்துவீச்சில் வேறு மற்ற வீரர்கள் நடையைக்கட்டினர்.

 வங்கதேச அணி தரப்பில் மோர்டசா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முஸ்தாபிஷூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் மெஹிடி, ரூபல் ஹூசைன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சதமடித்த தமிம் இக்பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி 25-ம் தேதி நடைபெற உள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Windies vs Bangladesh, 1st ODI, Bangladesh won,
× RELATED தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா...