×

விலை உயர்ந்தும் பயனில்லை உருளைக்கிழங்கு தேக்கம்

ஊட்டி : உருளைக்கிழங்கு கிலோ ரூ.70 வரை விற்கப்படுவதால் அறுவடையில் விவசாயிகள் மும்முரம் காட்டியுள்ளனர். மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி, வெள்ளைப் பூண்டு, காலிபிளவர், அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். எனினும், பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிகளவு பயிரிடுகின்றனர்.

 கர்நாடக மாநிலம், கொடைக்கானல் மற்றும் தாளவாடி போன்ற பகுதிளில் இருந்து உருளைக்கிழங்கு மார்க்கெட்டிற்கு வந்தாலும், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டிற்கு அதிக விலை கிடைக்கிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு மற்றும் கேரட் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

 பொதுவாக, நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு விலை ரூ.30 முதல் 50 வரை விலை போகும். ஆனால், கிலோ ஒன்று ரூ.50க்கு விற்பனை ஆனாலே விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடந்த ஒரு மாதத்திற்கு முன் கிலோ ஒன்று ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு படிப்படியாக விலை உயர்ந்து தற்போது கிலோ ஒன்று ரூ.40முதல் 70 வரை ரகத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

 இதனால், உருளைக்கிழங்கு விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், உருளைக்கிழங்கிற்கு அதிக விலை கிடைக்கும் நிலையில், தற்போது அறுவடையில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். நேற்று ஊட்டி மார்க்கெட்டிற்கு வழக்கத்தை காட்டிலும் அதிகளவு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்திருந்தது. அதேசமயம், தற்போது லாரி ஸ்டிரைக்கால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏலம் எடுத்தவர்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Potato, ooty,Farmers,Nilagiri, Tea, Carrot
× RELATED நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது: அப்போலோ மருத்துவமனை அறிக்கை