×

5 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பவுள்ள மேட்டூர் அணை..... நீர்மட்டம் 118 அடியாக உயர்வு

சேலம்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரத்து 951 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 333 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 81 ஆயிரத்து 284 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக உள்ளது. பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 13 ஆவது நாளாக தடை நீடித்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 61 ஆயிரத்து 644 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கென வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 88.73 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Mettur Dam, water level, KSR dam, Kabini Dam, Hokenakkal
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...