×

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி திடீர் பணியிட மாற்றம் : சிவனுடன் கருத்து வேறுபாடா?

புதுடெல்லி: இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியும், அகமதாபாத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான தபான் மிஸ்ரா, பெங்களூருவில் உள்ள தலைமையகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அகமதாபாத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் மூத்த விஞ்ஞானியுமான தபான் மிஸ்ரா, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அகமதாபாத் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மற்றொரு மூத்த விஞ்ஞானி டி.கே.தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் கிளைகளில் தலைமை பொறுப்புகளில் இருந்த பல விஞ்ஞானிகள், அதன் தலைமை பொறுப்புகளை வகித்துள்ளனர். இந்நிலையில், பல முக்கிய செயற்கைக்கோள்களை உருவாக்கிய பெருமையுடைய மிஸ்ரா, எதிர்காலத்தில் இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இஸ்ரோ தலைவர் சிவனுடன் மாற்றுக் கருத்து கொண்ட மூத்த விஞ்ஞானிகள், வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக ஒரு கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : ISRO, Transfer, Senior scientist, tapan mishra
× RELATED தமிழகம் முழுவதும் 9 டிஎஸ்பிக்கள்...