×

புதிய வாடகை சட்டம் முறையாக அமலாகாததால் பழைய சட்டப்படி மனுக்களை விசாரணைக்கு ஏற்க வேண்டும் ; வாடகை தீர்ப்பாயங்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை : புதிய வாடகை சட்டம் முறையாக அமலாகாததால், பழைய சட்டப்படி தாக்கலாகும் மனுக்களை விசாரணைக்கு ஏற்க  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது கட்டிடத்திலுள்ள வாடகைதாரர்களை தமிழ்நாடு கட்டிடம் (ஒப்பந்தம் மற்றும் வாடகை) சட்டம் 1960ன் படி வெளியேற்ற உத்தரவிடக் கோரி மாவட்ட முன்சீப் மற்றும் வாடகை தீர்ப்பாய அலுவலர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். ஆனால், தமிழ்நாடு நில உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் உரிமை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2017 ெகாண்டு வரப்பட்டுள்ளதால், பழைய சட்டத்தின்படி விசாரணைக்கு ஏற்க முடியாது எனக்கூறி மனுவை மாவட்ட முன்சீப் நிராகரித்தார். அந்த உத்தரவை ரத்து செய்து, என் மனுவை விசாரணைக்கு ஏற்க உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், புதிய சட்டம் கொண்டு வரப்பட்டாலும் இன்னும் முறையாக அமலாகவில்லை. இந்த சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்படவில்லை. எனவே, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும். அதே நேரம் இதேபோன்று பல்வேறு மாவட்ட முன்சீப் நீதிமன்றங்களில் மனுக்கள் நிலுவையில் இருப்பதால். புதிய சட்ட விதிகள் வகுக்கப்பட்டு முறையாக நடைமுறைக்கு வரும் வரை, பழைய கட்டிடங்கள் மீதான சட்டப்படியான மனுக்களை விசாரணைக்கு ஏற்க வேண்டும். இதுகுறித்து அனைத்து வாடகை தீர்ப்பாயம், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...