×

புதுவை பட்ஜெட்டுக்கு அனுமதி கொடுக்க கிரண்பேடி மறுப்பு

புதுச்சேரி : பட்ஜெட்டுக்கு அனுமதி கொடுக்க கிரண்பேடி மறுத்ததால் புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்த 2ம்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. ரூ.7530 கோடிக்கு முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். நேற்று சட்டசபையை சபாநாயகர் காலவரையின்றி ஒத்திவைத்தார். இதுகுறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறுகையில், பட்ஜெட்டில் நிதி மசோதாவுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆனால் பேரவையில் மானிய கோரிக்கைகள் உள்பட இதர அலுவல்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளேன்.  பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் தராததால் அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் தந்தவுடன் சட்டசபையை மீண்டும் கூட்டி நிதி மசோதா நிறைவேற்றப்படும் என்றார். புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் நிதி மசோதாவுக்கு  கவர்னர் அனுமதி வழங்கிவிடுவார். இந்த முறை கவர்னர் கிரண்பேடி அனுமதி வழங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...