×

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு : முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் விடுதலை சரிதான் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட  வழக்கில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோரை விடுவித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001 பிப்ரவரி 19ம் தேதி ஒகேனக்கல் தேசநாதீஸ்வரர் கோயில் நிலத்தை ஏலம் விடுவதை ரத்து செய்யக்கோரி தர்மபுரி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்புமணி என்பவரிடம் முல்லைவேந்தன் முறையிட்டார். ஆனால், அவரது பேச்சை அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்புமணி கேட்கவில்லை. இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், முல்லைவேந்தன் உள்ளிட்டோர் அன்புமணியை தாக்கியதாக முல்லைவேந்தன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் 11 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சிபிசிஐடி போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரரை தாக்கியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சாட்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளே பல்டி அடித்துள்ளனர். எனவே, 11 பேரையும் விடுதலை செய்த தர்மபுரி நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் என்று தீர்ப்பளித்தார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...