×

ராஜிவ் சுக்லா உதவியாளர் ராஜினாமா : உ.பி. அணியில் இடம் பெற லஞ்சம் கேட்டதாக புகார்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டுமானால் பெண்களை லஞ்சமாக அனுப்பி வைக்க வேண்டுமென்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜிவ் சுக்லாவின் உதவியாளர் ராஜினாமா செய்துள்ளார். ஐபிஎல் தலைவரும் உத்தரப்பிரேத மாநில கிரிக்கெட் சங்க இயக்குநருமான ராஜிவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபி. இவர் சுக்லாவுக்கு மிகவும் நெருக்கமானவர். இதை பயன்படுத்தி, இளம் கிரிக்கெட் வீரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராகுல் ஷர்மா என்ற வாலிபர், அக்ரம் சைபி மீது புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, செய்தி டிவி சேனல் ஒன்று சைபி, ராகுல் ஷர்மா இடையேயான போன் உரையாடலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் ஷர்மா அளித்த புகாரில், ‘‘என்னைப் போன்ற இளம் வீரர்களிடம் சைபி ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார். டெல்லியில் உள்ள குறிப்பிட்ட ஓட்டலுக்கு பெண்களையும் அனுப்பி வைக்குமாறும் கூறுகிறார். அவ்வாறு செய்தால் மாநில அணியில் இடம் பெறச் செய்வேன் என உறுதி அளித்தார். இதைப் போன்று சிலர் லஞ்சம் கொடுத்து அணியில் சேர்ந்துள்ளார்கள்’’ என்றார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சைபியை உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சஸ்பெண்ட் செய்தது. அதைத்தொடர்ந்து சைபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையும் நடத்தப்பட உள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Rajiv Shukla,UP team,Rahul Sharma
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...