×

கேரளாவில் கனமழைக்கு ஒன்றரை மாதத்தில் 102 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழைக்கு நேற்று ஒரே நாளில் 14 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்தில் பருவ மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த மே இறுதியில் தொடங்கியது. முந்தைய வருடங்களை விட இந்த ஆண்டு மிக பலத்த மழை பெய்தது. இதுவரை  வழக்கத்தை விட 21 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்ைல பெரியாறு, இடுக்கி, நெய்யாறு உள்பட பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கன மழையால் நூற்றுக்கணக்கான விடுகள் சேதமடைந்து உள்ளன. மேலும் ஏராளமானோர் பலியாகியும் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 14 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் உள்பட கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் மொத்தம் 102 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த...