×

தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 11 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கால்வாய் மற்றும் வாய்க்கால்களை தூர்வாருவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த  பணியை கண்காணிப்பதற்காக 11 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் அருண் சுந்தர் தயாளன் புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு கோட்டத்தையும், நகர் ஊரமைப்பு இயக்குனர் பழனிச்சாமி சிதம்பரம் கொலீரூன் கோட்டம், மகளிர் மேம்பாட்டு ஆணைய மேலாண்ைம இயக்குனர் பிரவீன் நாயர் அரியலூர் மருதையாறு கோட்டம், தாட்கோ மேலாண்மை இயக்குர் சுப்பையன் திருச்சி ஆறுகள் நவீனப்படுத்துதல் கோட்டம், வேளாண் துறை செயலாளர் கருணாகரன் ஈரோடு கீழ்பவானி கோட்டம்,

சுகாதாரத்துறை துணை செயலார் கிரான் குராலா தஞ்சாவூர் காவிரி வடிநில கோட்டம், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்டம், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் ஆனந்த் தஞ்சாவூர் வெண்ணாறு கோட்டம், புதுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்டம், பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர் சரவணா வேல்ராஜ் திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்டம், கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன் தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவூர் காவிரி வடிநில கோட்டம், தமிழ்நாடு புத்தகம் மற்றும்  கல்விநிலைய மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன் திருவாரூர் வெண்ணாறு கோட்டம், சுகாதாரத்துறை கூடுதல் இயக்குர் நாகராஜன் மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்டம் (கிழக்கு) தஞ்சாவூர் காவிரி வடிநில  கோட்டத்திற்கும் நியமனம் ெசய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...