×

இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச ரோபோ கருத்தரங்கம்: நாளை தொடங்குகிறது

சென்னை: சென்னை, இந்துஸ்தான் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில், லண்டன் ராயல் அகாடமிக் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி உதவியுடன் தானியங்கி மற்றும் அழிக்க முடியாத ரோபோக்கள் குறித்த சர்வதேச  கருத்தரங்கம் நாளை மற்றும் நாளை மறுநாள் (19, 20 ஆகிய தேதிகளில்) நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கில் முன்னணி கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அறிஞர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தானியங்கி மற்றும் அழிக்க முடியாத ரோபோக்கள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும், தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் இருந்து பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இந்த கருத்தரங்கில் இந்திய ரயில்வே தொழில்நுட்ப தலைவரும், கான்பூர் ஐஐடி பேராசிரியருமான என்.வியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இக்கருத்தரங்கில், இன்ஜினியர்கள் மற்றும் வல்லுநர்கள் தொழில்நுட்பத்தை தங்களது தாய் மொழியில் தெரிந்து கொள்ளும் விதமாக, ‘‘என்டிடி’’ எனப்படும் கையேடு வெளியிடப்பட உள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்