×

நாளை லோக்பால் தேர்வு கூட்டம்

புதுடெல்லி: லோக்பால் தேர்வு கூட்டம் நாளை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பற்றி விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டும் அதன் உறுப்பினர்களை கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு நியமிக்கவில்லை. இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால் மத்திய அரசு லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி, நவீன் சின்கா அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மத்திய அரசு ஏன் இன்னும் லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஜூலை 19ல்(நாளை) லோக்பால் தேர்வு கூட்டம் நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதை தொடர்ந்து விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியை மத்திய அரசு லோக்பால் அமைப்பில் நீதித்துறை அதிகாரியாக நியமித்து உள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...