×

பிரதமர் நிகழ்ச்சியில் பந்தல் சரிந்த சம்பவம்: விசாரணை மேற்கொள்ள மத்திய குழு விரைகிறது

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து 90 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து மத்திய சிறப்பு பாதுகாப்பு குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரமாண்ட விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் பேசிக் கொண்டிருந்தபோது, மாநாட்டு திடலின் நுழைவுவாயில் அருகே போடப்பட்டிருந்த பந்தல் திடீரென சரிந்து விழுந்து 50 பெண்கள் உள்பட 90 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து தனது பேச்சை பாதியில் நிறுத்திய மோடி, தனது பாதுகாப்பு வீரர்களையும், நிர்வாகிகளையும், மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர், சம்பவம் நடைபெற்ற இடத்தில் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பில் குறைபாடுகள் ஏற்பட்டதா அல்லது நிகழ்ச்சி ஏற்பாடு அல்லது ஒருங்கிணைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டதா என்பது குறித்து இந்தக் குழு ஆராயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாலக்காடு பகவதி அம்மன் கோயில் பூரம் திருவிழா