×

ஆஸி. கால்பந்து கிளப் அணியில் உசேன் போல்ட் ஒப்பந்தம்

சிட்னி: தடகளத்தில் மகத்தான வீரராக சாதனைகள் படைத்த உசேன் போல்ட், ஆஸ்திரேலிய கால்பந்து கிளப் அணிக்காக விளையாட உள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட் (31 வயது) 100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனாக முத்திரை பதித்தவர். தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய போல்ட், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கால்பந்து விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர்ஸ் கிளப் அணிக்காக ஏ டிவிஷன் லீக் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை உறுதி செய்துள்ள போல்ட்டின் ஏஜன்ட் டோனி ராலிஸ், போல்ட்டுக்கு வழங்கப்பட உள்ள ஊதியம் குறித்து தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்துள்ளார். ஏ லீக் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக, சில பயிற்சி ஆட்டங்களில் போல்ட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...