×

பாரத் சூப்பர் லீக் கபடி போட்டியில் கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்பு

சென்னை: திறமையான கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரத் சூப்பர் லீக் கபடி போட்டித் தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன்  தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் கூறுகையில், ‘கபடி தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டு. கிராமப்புறங்களில் பெருமளவில் விளையாடுகின்றனர். விளையாட்டில் மட்டுமின்றி உடல் உழைப்பு காரணமாக உறுதி மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் பாரத் சூப்பர் லீக் கபடி போட்டிகளை நடத்தி வருகின்றன.

  சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில்  தமிழகத்தின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 128 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரில் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும்’ என்றார். ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் தீபக் ராதி, பாரத் கபடி சங்க நிர்வாகி சுரேந்தர் பஹல் உடனிருந்தனர். மேலும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற 4 அணிகளின் கேப்டன்கள்  பிரபாகரன்(நாமக்கல்),  ரஞ்சன்(திருச்சி), மணிகண்டன்(புதுக்கோட்டை), நிஷாந்த்(சென்னை) ஆகியோரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு