×

இலங்கை யு-19 அணி 244 ரன்னில் சுருண்டது

கொழும்பு: இந்தியா யு-19 அணியுடனான இளைஞர் டெஸ்ட் போட்டியில், இலங்கை யு-19 அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கொழும்புவில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (ஜூலை 17-20), டாசில் வென்று பேட் செய்த இலங்கை யு-19 அணி 70.3 ஓவரில் 244 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சூரியபண்டாரா அதிகபட்சமாக 69 ரன் எடுத்தார். நிஷான் பெர்னாண்டோ, நிபுன் தனஞ்ஜெயா, மெண்டிஸ் தலா 39 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்திய யு-19 பந்துவீச்சில் ஹர்ஷ் தியாகி, படோனி தலா 4 விக்கெட், அர்ஜுன் டெண்டுல்கர், ஜங்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

வேகப் பந்துவீச்சாளரான சச்சின் மகன் அர்ஜுன் 11 ஓவரில் 2 மெய்டன் உட்பட 33 ரன்னுக்கு 1 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய இந்தியா யு-19 அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்துள்ளது (16.4 ஓவர்). கேப்டன் அனுஜ் ராவத் 63 ரன் (59 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அதர்வா டெய்டே 26 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு