×

இந்தியா ஏ அணியுடன் டெஸ்ட் அலஸ்டர் குக் சதத்தில் லயன்ஸ் ரன் குவிப்பு

வொர்செஸ்டர்: இந்தியா ஏ அணியுடனான டெஸ்ட் போட்டியில் (4 நாள்), அலஸ்டர் குக்கின் சதத்தால் இங்கிலாந்து லயன்ஸ் அணி அபாரமாக ரன் குவித்தது. வொர்செஸ்டர் கவுன்டி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் பர்ன்ஸ், அலஸ்டர் குக் களமிறங்கினர். பர்ன்ஸ் 5 ரன்னில் வெளியேற, அலஸ்டர் குக் - நிக் கப்பின்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்தது. கப்பின்ஸ் 73 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து குக் - டேவிட் மாலன்  3வது விக்கெட்டுக்கு 181 ரன் சேர்த்தனர்.

அபாரமாக விளையாடிய குக் 180 ரன் (268 பந்து, 26 பவுண்டரி), மாலன் 74 ரன் (158 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர்.  இங்கிலாது லயன்ஸ் அணி 128.5 ஓவரில் 423 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா ஏ பந்துவீச்சில் சிராஜ் 4, நதீம் 3, ராஜ்பூத் 2, சாய்னி 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...