×

பொங்கலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி: 5ம் வகுப்பு மாணவி மயிரிழையில் தப்பினார்

பொங்கலூர்: பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளிக்காற்றும் சாரல் மழையும் பெய்தது. இதில், பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையம் அரசுப்பள்ளியில் கழிவறைக்கு செல்லும் இடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. மதிய உணவு இடைவேளையின் போது அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சங்கீதா(10) என்ற மாணவி, கழிவறைக்கு சென்றார். வழியில் அறுந்து கிடந்த மின் கம்பி கையில் லேசாக உரசியதில், ஷாக் அடிக்கவே பயந்துபோய் அலறினார். சத்தம் கேட்டு  மாணவ மாணவிகள் ஓடிவந்தனர். மின்சாரம் தாக்கியதில் சங்கீதாவுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

உடனடியாக ஆசிரியைகள் சங்கீதாவை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மின்வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.  மாணவ மாணவிகள் நடமாடும் பள்ளி வளாகத்தில், மின்கம்பி அறுந்து கிடந்ததை கூட கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அதிர்ஷ்வசமாக மாணவி சங்கீதா மயிரிழையில் தப்பிவிட்டார். மழைக்காலங்களில் மின்கம்பிகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும், பள்ளி நிர்வாகமும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது