×

குழந்தைகள் மையத்துக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறுவனம், குழந்தைகள் மையம், தத்தெடுப்பு மையம் என்ற பெயரில் கர்ப்பிணி பெண்களை பராமரித்தல், ஆதரவற்ற குழந்தைகளை பேணுதல் போன்ற பணிகளை செய்து வந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், 3 குழந்தைகளை பணத்துக்கு விற்று விட்டதாக, அந்த குழந்தைகள் மையத்தின் மீது புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, கன்னியாஸ்திரி ஒருவர் உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அந்த மையத்தில் பிறந்த குழந்தைகளில், 100க்கும் மேற்பட்டோரின் பிறப்பு குறித்த பதிவுகள் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், மாநில சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், மையத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார். அத்துடன், ‘குழந்தைகள் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் உயரிய அமைப்பான ‘காரா’வில் அனைத்து மையங்களும், ஒரு மாதத்துக்குள் தங்களது விபரங்களை இணைக்க வேண்டும்’ என்றும், அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை...